search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள்

    கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் பெரும்பாலான மாநிலங்கள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
    கொரோனா நாட்டு மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய மற்றும் மாநில அரசுகள் கருதுகின்றன. இதனால் தகுதியுள்ள அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்திட ஆர்வம் காட்டி வருகின்றன.

    ஒவ்வொரு மாநிலங்களும் மெகா முகாம் நடத்தி ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

    சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டன. இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம், லட்சத்தீவு, தாத்ரா அண்டு நகார் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்கள் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தியுள்ளன. இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×