search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருடன் தூக்கிய காட்சி.
    X
    மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருடன் தூக்கிய காட்சி.

    மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருடன் அந்தரத்தில் தூக்கிய போலீசார்

    ‘நோ பார்க்கிங்' பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் வண்டியுடன் தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புனே

    மராட்டிய மாநிலம் புனே நானா பேத், சந்த் கபீர் சவுக் பகுதியில் ‘நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் ‘நோ பார்க்கிங்' பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.

    அப்போது அந்த நபர் வேறு நபருக்காக காத்து கொண்டு இருப்பதாக கூறினார். எனினும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதேபோல மோட்டார் சைக்கிளில் இருந்தவரும் வண்டியில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் அந்த நபருடன் மோட்டார் சைக்கிளை டோயிங் வண்டியில் ஏற்ற, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த ஊழியர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்த நபருடன் வண்டியை தூக்கினார். இதையடுத்து அங்கு இருந்த மக்கள் போக்குவரத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் போலீசார், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருடன் அந்தரத்தில் தூக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக உள்துறை மந்திரி வால்சே பாட்டீல் கூறினார்.
    Next Story
    ×