search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி, சரத் பவார்
    X
    சோனியா காந்தி, சரத் பவார்

    பா.ஜ.க.-வின் மக்கள் விரோத போக்கை கண்டித்து 11 நாட்கள் நாடு தழுவிய போராட்டம்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

    சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பா.ஜ.க.-வின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது. அப்போது ‘‘2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு. ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையில் செயல்பட வேண்டும். மழைக்கால கூட்டத்தொடரை போன்று எதிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். ஒரு பெரிய அரசியல் போர் வெளியே நடத்தப்பட வேண்டும். 2024 தேர்தலுக்கு தயாராகுங்கள். தேர்தலுக்கான திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும்’’ என சோனியா காந்தி வலியுறுத்தினார்.

    கூட்டத்திற்குப்பிறகு எதிர்க்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பா.ஜனதாவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அடுத்த மாதம் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 11 நாட்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விவசாய நலனுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அடிப்படை ஆதாய விலையை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்  பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×