search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி-மம்தா பானர்ஜி சந்திப்பு
    X
    சோனியா காந்தி-மம்தா பானர்ஜி சந்திப்பு

    பாராளுமன்ற தேர்தல் வியூகம்- சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

    கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக மம்தா தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். 

    இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை 
    மம்தா பானர்ஜி
     இன்று சந்தித்துப் பேசினார். மேற்கு வங்காள தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக சோனியாவை அவர் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது 2024ல் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

    சோனியா தவிர மேலும் சில முக்கியத் தலைவர்களையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார் மம்தா.

    Next Story
    ×