search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டர்
    X
    டுவிட்டர்

    ஒரு வழியாக உள்நாட்டு குறைதீர் அதிகாரியை நியமித்தது டுவிட்டர்

    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகள் மீறப்பட்டால் டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி சமூக ஊடக நிறுவனங்கள் உள்நாட்டு குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு இணங்கி செயல்படாத சமூக வலைத்தளங்களுக்கு 3 மாத அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் மே 25ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் உள்நாட்டு குறைதீர் அதிகாரியை நியமிக்காமல் இருந்தது. இதனால் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

    இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீமன்றம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகள் மீறப்பட்டால் 
    டுவிட்டர்
     நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தது.

    உள்நாட்டு குறைதீர் அதிகாரியின் தொடர்பு முகவரி

    இந்நிலையில், உள்நாட்டு குறைதீர் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. டுவிட்டர் வலைத்தளத்தில் அவரது பெயர் மற்றும் தொடர்புக்கான இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. 

    Next Story
    ×