search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலை
    X
    விநாயகர் சிலை

    மகாராஷ்டிரா: விநாயகர் சதுர்த்திக்கு 4 அடி உயர சிலை வைக்க அரசு அனுமதி

    இந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி முதல் விநாயகா் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்க உள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமாிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது.

    இந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்க உள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர்
    சிலைகள் அதிகபட்சம் 4 அடி இருக்கலாம். வீடுகளில் 2 அடி உயரம் வரையிலான சிலைகளை வைத்து கொள்ளலாம். பொது மக்கள் வீட்டில் உலோகம் அல்லது கல்லால் ஆன சிலைகளை வைக்க வேண்டும். களிமண்ணால் ஆன சிலையை வைத்தால் அவர்களின் வீடு அல்லது செயற்கை குளங்களில் அதை கரைக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முககவசம் அணிதல், சமூகஇடைவெளி ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். பஜனைகள் போன்ற நிகழ்ச்சிகளால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து ரத்த தான முகாம், மருந்துவ முகாம், சமூக விழிப்புணர்வு முகாம் போன்றவற்றை நடத்தலாம். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு என தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படாது.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட வேண்டும்.
    Next Story
    ×