search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதலாக 2 பேரணிகள் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு
    X
    கூடுதலாக 2 பேரணிகள் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு

    வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு - கூடுதலாக 2 பேரணிகள் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு

    எங்களுடைய போராட்ட விசயங்களை வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர்.

    இன்றுடன் 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவசாய அமைப்புகள் ஆலோசனை மேற்கொண்டன.  இதன்பின்னர் பாரதிய விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

    அவர் கூறும்போது, இன்றைய கூட்டத்தில் எங்களுடைய போராட்ட விசயங்களை வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம்.  அதற்காக கூடுதலாக 2 பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

    கோப்புபடம்

    இதன்படி, வரும் ஜூலையில் 9 மற்றும் 24 ஆகிய நாட்களில் டிராக்டர் பேரணி நடைபெறும்.  வரும் ஜூலை 9ந்தேதியில் சாம்லி மற்றும் பாக்பத் நகர மக்களும், வரும் ஜூலை 24ந்தேதியில் பிஜ்னோர் மற்றும் மீரட் நகர மக்களும் பேரணியில் பங்கு பெறுவார்கள் என கூறியுள்ளார்.

    Next Story
    ×