search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோவாவேக்ஸ்
    X
    நோவாவேக்ஸ்

    நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கியது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

    கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரி்தது வரும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா,தற்போது நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரிக்க தொடங்கியுள்ளது.
    சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆக்ஸ்போர்டு- அஸ்டா ஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

    இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. அதன் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமான முடித்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிறுவனம் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய நிறுவனத்துடன் கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முதல் தொகுப்பு கொரோனா தடுப்பூசி டோஸ்களை தயாரிக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் பூனவல்லா இதை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×