search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உள்ளூர் பொம்மை தொழிலுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும்- பிரதமர் மோடி

    மத்திய அரசு டாய்கேத்தான் 2021 என்ற பெயரில் நடத்திய பொம்மைகள் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 1.2 லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    ‘டாய்கேத்தான்-2021’ என்ற பெயரில் பொம்மைகள் கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை ஒன்றிணைந்து கூட்டாக நடத்தி வருகின்றன.

    இதில் நாடு முழுவதும் இருந்து 1.2 லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகளைப் பதிவுசெய்து சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் 1,567 யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு, 22-ம் தேதி தொடங்கி இன்று வரையிலான 3 நாள் டாய்கேத்தான் இறுதிப்போட்டிக்கு பட்டியலிடப்பட்டன.

    இந்தக் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி வழியாக கலந்துரையாடினார். அதன்பின் அவர் கூறியதாவது:

    நமது நாட்டில் 80 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளுக்குப் போகிறது. இந்த நிலைமையை மாற்றுவது முக்கியம். 100 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.7.5 லட்சம் கோடி) உலகளாவிய பொம்மை சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 1.5 பில்லியன் டாலர்தான் (சுமார் ரூ.11,250 கோடி). ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் அதன் குடும்பம் என்றால், முதல் புத்தகம் மற்றும் முதல் நண்பர்கள் பொம்மைகள்தான்.

    நமது கவனம் பொம்மைகளை, விளையாட்டுகளை மேம்படுத்துவதில் இருக்கவேண்டும். அவை இந்தியத் தன்மையின் ஒவ்வொரு அம்சத்தையும் கொண்டிருக்க வேண்டும். உள்ளூர் பொம்மைத் தொழிலுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×