search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரீடா பகுகுணா, சச்சின் பைலட்
    X
    ரீடா பகுகுணா, சச்சின் பைலட்

    ரீடா சச்சின் தெண்டுல்கரிடம் பேசியிருக்கலாம்: சச்சின் பைலட் பதிலடி

    உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜிதின் பிரசாத்தை பா.ஜனதா தன்பக்கம் இழுத்துள்ளது.
    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவருமான ஜிதின் பிரசாத் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார்.

    இது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் 2 வருடத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு எப்படியாவது அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நேரத்தில் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் காங்கிரசில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


    ராகுல் காந்தியின் முக்கிய தளபதிகளாக செயல்பட்டவர்களில் ஜிதின் பிரசாத்தும் ஒருவர். ஏற்கனவே இதே போல தளபதி அந்தஸ்தில் இருந்த ஜோதிர் ஆதித்யா பா.ஜனதாவில் சேர்ந்து விட்டார். மற்றொரு தளபதியான ராஜஸ்தானை சேர்ந்த சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து வெளியேறுவதற்கு கலகத்தை ஏற்படுத்தினார். பின்னர் காங்கிரசிலேயே இருந்துவிட்டார்.

    தற்போது சச்சின் பைலட்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் பா.ஜனதா பெண் தலைவரான ரீடா பகுகுனா ஜோஷி, சச்சின் பைலட்டிடம் பா.ஜனதா கட்சியில் சேர்வது குறித்து பேசியதாக வெளியான செய்திதான்.

    ஜிதின் பிரசாத்

    இந்த நிலையில் இன்று எரிபொருள் விலையை கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பா.ஜனதாவில் சேர்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ரீடா பேசியதாக வந்த தகவல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.


    அதற்கு சச்சின் பைலட் பதில் அளிக்கையில் ‘‘ரீடா பகுகுணா சச்சினிடம் பேசியாக தெரிவித்துள்ளார். அவர் சச்சின் தெண்டுல்கரிடம் பேசியிருக்கக் கூடும். என்னிடம் பேச அவருக்கு தைரியம் கிடையாது’’ என்றார்.
    Next Story
    ×