search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது

    கொரோனா பரவல் காரணமாக வருமானங்களை இழந்துள்ள மக்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் அவர்கள் தங்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவில் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    பெங்களூரு :

    நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.

    இந்த நிலையில் அந்த வரிசையில் கர்நாடகமும் ஓரிரு நாளில் சேர உள்ளது. பெங்களூருவில் நேற்று பெட்ரோல் விலை ரூ.98.84 ஆக இருந்தது. இது இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) 100 ரூபாயை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வருமானங்களை இழந்துள்ள மக்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் அவர்கள் தங்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவில் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×