search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்களை தகனம் செய்யும் பணியாளர்கள்
    X
    உடல்களை தகனம் செய்யும் பணியாளர்கள்

    தற்போது சற்று ஓய்வு கிடைக்கிறது: டெல்லியில் உடலை தகனம் செய்யும் பணியாளர்கள் சொல்கிறார்கள்

    2-வது அலை உச்சத்தில் இருக்கும்போது டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய இடம் இல்லாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    டெல்லியல் கொரோனா தொற்றின் 2-வது அலை ஏப்ரல்- மே மாதங்களில் ருத்ர தாண்டவம் ஆடியது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு இடம் கிடைக்காத அவலை நிலை, இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திருத்தல் போன்ற நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டது.

    தினந்தோறும் சுமார் 500 பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்கள் உடலை தகனம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என வலியுறுத்த, தகன மேடை அமைக்கப்பட்ட இடங்கள் நிரம்பின. இன்று செல்லும் உடல் நாளைதான் எரியூட்டப்படும் என நிலை இருந்தது. ஆகவே, தகனம் செய்யம் ஊழியர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போது சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் ஏறக்குறைய முழுவதுமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 316 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

    தகனம்  செய்யும் இடம்

    இதனால் தகனம் செய்யும் இடத்திற்கு செல்லும் உடல்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தற்போது சற்று ஓய்வு கிடைக்கிறது என டெல்லியில் தகனம் செய்யும் இடத்தில் பணிபுரியம் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில் ‘‘முன்பைவிட தற்போது சற்று நிவாரணம் (பணிச்சுமையில் இருந்து) கிடைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்ட வரவில்லை. கொரோனா உச்சத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் நாங்கள் 25 முதல் 27 உடல்களை எரியூட்டினோம’’ என்றார்.

    நிர்மல் ஜெயின்
    நிர்மல் ஜெயின்

    கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயர் நிர்மல் ஜெயின் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழ்ந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக இங்கே வரவில்லை. கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தொடர்ந்து, இந்த நிலை தொடரும் என நம்புகிறோம். 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வைத்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×