search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    புனே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: 12 ஊழியர்கள் பலி

    குளோரின் டையாக்சைடு தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் எஸ்விஎஸ் அகுவா டெக்னாலாஜிஸ் என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. புனே சிட்டியின் வெளிப்புற பகுதியான முல்ஷி தெஹ்சில் உள்ள இந்த ஆலையில் குளோரின் டையாக்சைடு தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், 17 ஊழியர்களை காணவில்லை என தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

    தீ விபத்து

    பாக்கெட் செய்யும் இடத்தில் ஏற்பட்ட தீப்பொறி, பின்னர் தீ விபத்தாக ஏற்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×