search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - மத்திய அரசு அறிவிப்பு

    அரசு சம்பளத்தில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த தேர்வை மாநில அரசுகள் நடத்துகின்றன.
    புதுடெல்லி:

    அரசு சம்பளத்தில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த தேர்வை மாநில அரசுகள் நடத்துகின்றன.

    டெட்’ தோ்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், 7 ஆண்டுகள் செல்லுபடி ஆகும். இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டது.

    எனவே, 7 ஆண்டுகளுக்குள் அரசு சம்பளத்தில் ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால், மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய நிலை இருந்தது. இது, ஆசிரியர் பணியை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கூடுதல் சுமையாக கருதப்பட்டது.

    மத்திய அரசு


    இந்தநிலையில், ‘டெட்’ தேர்வு தேர்ச்சி சான்றிதழ், ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழின் செல்லுபடி ஆகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுள் முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ‘டெட்’ தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருந்தும்வகையில், முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது..

    எனவே, எல்லா மாநில, யூனியன் பிரதேசங்களும் ‘
    டெட்
    ’ தேர்ச்சி சான்றிதழ் செல்லும் காலத்தை நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு புதிதாக ‘டெட்’ தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும்.

    ஆசிரியர் பணியை விரும்புபவர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உதவும் நடவடிக்கையாக இது அமையும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×