search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு
    X
    கோவிஷீல்டு

    கோவிஷீல்டு 2-வது டோஸ்க்கு 84 நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதி: மத்திய அரசு

    கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸை 12 முதல் 16 வாரங்களுக்குள் எடுத்துக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்திருந்தது.
    கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸ் போட்டபிறகு, இரண்டாவது டோஸ் 4 வாரம் முதல் 6 வார இடைவெளிக்குள் செலுத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த இடைவெளியை 6-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது.

    இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில், கோவிஷீல்டின் 2-வது டோஸ் செலுத்திக் கொள்ள 84 நாட்களுக்கு பின் அரசு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக பதிவு செய்தவர்கள், தங்களுக்கு தேவையான தேதியை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×