search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம்
    X
    உச்சநீதிமன்றம்

    மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை ரத்து செய்து உத்தரவிடுக: உச்சநீதிமன்றத்தை நாடியது மேற்கு வங்காள அரசு

    கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு தற்போது கடைபிடித்து வரும் கொள்கையை ரத்து செய்து உத்தரவிடும்படி மேற்கு வங்காள அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
    இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை. மேலும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

    தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசு ஒரு விலையும், மாநில அரசுகளுக்கு ஒரு விலையும், தனியாருக்கு ஒரு விலையும் நிர்ணயித்தது.

    மத்திய அரசுக்கு வழங்கும் விலையிலேயே மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. மேலும் விலையை குறைக்க கேட்டுக்கொண்டன. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி நிறுவனங்கள் விலையை சற்று குறைத்தன.

    இந்த நிலையில் மேற்கு வங்காள அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ‘‘மத்திய அரசின் தற்போதைய தடுப்பூசி கொள்ளையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், ஒரு விதமான விலையுடன் உலகளாவிய பாதுகாப்பை கொண்டு வர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×