search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திர மாநில கொரோனா அப்டேட்ஸ்....

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 48,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் 12,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 48,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59,500 பேர் குணமடைந்துள்ள நிலையில், 567 பேர் உயிரழந்துள்ளனர். தற்போது வரை 6,56,870 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 70,851 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,999 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 6,07,422 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,52,275 பேர் குணமடைந்துள்ளனர். 1,47,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7648 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோப்புப்படம்

    கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 44,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,901 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 239 பேர் உயிரிழந்துள்ளனர். 4,44,734 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 16,250 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,51,852 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11,63,994 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×