search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி மம்தா பானர்ஜி
    X
    முதல் மந்திரி மம்தா பானர்ஜி

    எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது - பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    மேற்கு வங்காளத்தில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சனிக்கிழமை தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக  குற்றம் சாட்டியுள்ளார், மேலும் இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கல்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

    ஆளும் திரிணாமுல் காங்கிரசின் அபிவிருத்தி திட்டங்களை பிரசாரம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ.க. சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

    அவர்கள் (பா.ஜ.க. தலைவர்கள்) எங்கள் அன்றாட உரையாடலைக் கூட ஒட்டு  கேட்கிறார்கள். அவர்கள் சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் எங்கள் தொலைபேசி அழைப்புகளைத் ஒட்டு கேட்கிறார்கள் என்று தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு நான் உத்தரவிடுவேன். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரையும் நான் விடமாட்டேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்கனவே அறிந்து கொண்டேன்.

    சில ஏஜென்சிகளுடன் இதுபோன்ற செயல்களில் மத்திய படைகள் ஈடுபட்டுள்ளன என்ற தகவலும் என்னிடம் உள்ளது. பா.ஜ.க. அதன் பின்னணியில் உள்ளது என்பதும் தெளிவாகிறது. ஆனால் அதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர்கள் கூறுவார்கள் என தெரிவித்தார்.
    Next Story
    ×