search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒடிசாவில் தடுப்பூசி தட்டுப்பாடு: 900 மையங்கள் மூடல்

    மத்திய அரசு தடுப்பூசி திருவிழா திட்டத்தை தொடங்கி வேகமாக தடுப்பூசி செலுத்த கேட்டுக்கொண்ட நிலையில் ஒடிசாவில் மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
    வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசியை மக்கள் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இன்றில் இருந்து நான்கு நாட்கள் தடுப்பூசி திருவிழா திட்டமாக செயல்படுத்த பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த நான்கு நாட்களில் மிகவும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில் அசாம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசு போதுமான அளவிற்கு ஒதுக்கவில்லை என்கிறது. இதனால் மத்திய அரசுக்கும் ஒடிசா அரசுக்கும் இடையில் இந்த விசயத்தில் முரண்டுபாடு ஏற்பட்டுள்ளது.

    இன்று 1,400 மையங்களில் 579 மையங்களில்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதிதாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை எனில், ஏராளமான மையங்கள் நாளை மூடப்படும் என ஒடிசா மாநில குடும்ப நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    கோப்புப்படம்

    மேலும், ஒடிசா மாநிலத்திற்கு 42,71,870 டோஸ்கள் கோவிஷீல்டு வழங்கப்பட்டன. இதில் சனிக்கிழமை வரைக்கும் 40,38,212 டோஸ்கள் செலுத்தப்பட்டுவிட்டன. 3,36,780 கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டதில், 2,58,820 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன எனத் தெரிவித்தார்.
    Next Story
    ×