search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி வர்ஷா கெய்க்வாட்
    X
    மந்திரி வர்ஷா கெய்க்வாட்

    மகாராஷ்டிராவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு: மந்திரி வர்ஷா கெய்க்வாட்

    1 முதல் 9-ம் வகுப்புகள் வரை மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு உள்ளன. இதனால் 1 முதல் 9-ம் வகுப்புகள் வரை மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஒரு பக்கம் மாணவர்களின் எதிர்காலம், மற்றொரு பக்கம் கொரோனா பயம். இதனால் மாணவர்களுக்கு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து நான் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினேன்.

    இதில் மாணவர்களின் தேர்வை விட அவர்களின் ஆரோக்கியம் தான் மிகவும் முக்கியமாக கருத வேண்டும் என கலந்தாலோசனையில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக மீண்டும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கலந்தாலோசனை நடத்தி ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×