search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா மருத்துவமனை
    X
    ஒடிசா மருத்துவமனை

    ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்ற மக்கள்

    மகாராஷ்டிராவைத் தொடரந்து ஒடிசா அரசும், மத்திய அரசு போதுமான தடுப்பூசி வழங்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
    இந்தியாவில் 2-ம் அலை கொரோனா பாதிப்பு மிகமிக அதிகமான வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் மகராஷ்ராவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அளவில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

    மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழகம், கர்நாடக மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பல மாநிலங்களிலும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஒடிசா மருத்துவமனை

    தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று புவனேஷ்வர் நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்தனர்.

    மத்திய அரசின் தவறாக நிர்வாகமும், தடுப்பூசி தட்டுப்பாடு என்ற செய்தியாலும் அதிகமான கூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவர், ‘‘நான் இங்கே நீண்ட நேரமாக வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன். நேரடியாக வந்தவர்களும், ஆன்லைனில் பதிவு செய்தவர்களும் ஒரே வரிசயில் நிற்கிறார்கள்’’ என்றார்.

    ஒடிசா மருத்துவமனை

    ஆனால் மருத்துவமனை டாக்கடர் கூறுகையில் ‘‘கோவில்ஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு என்று கேள்விபட்டோம். ஆனால், கோவேக்சின் தடுப்பூசி புவனேஷ்வர் மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது, தட்டுபாடு ஏதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட நெறிமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். யார் முதலில் வருகிறார்களோ? அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி’’ என்றார்.
    Next Story
    ×