search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்கு வங்காளத்தில் நாளை 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு

    மேற்குவங்காளத்தில் மட்டும் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294.
    கொல்கத்தா:

    தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் 4 மாநில தேர்தல்கள் முற்றிலும் முடிவடைந்து விட்டன. மேற்கு வங்காளத்தில் மட்டும் தேர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அந்த இரு மாநிலங்களிலும் கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. 2-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந் தேதியும், 3-வது கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதியும் நடந்தன. அத்துடன் அசாமில் தேர்தல் முடிந்துவிட்டது.

    மேற்குவங்காளத்தில் மட்டும் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294.

    இதில் முதல் மற்றும் 2-வது கட்ட தேர்தலில் தலா 30 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் 31 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    4-வது கட்ட தேர்தல் நாளை (10-ந் தேதி) 44 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே நடந்த 3 கட்ட தேர்தல்களின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.

    கோப்புப்படம்

    எனவே நாளைய தேர்தலிலும் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அடுத்ததாக வருகிற 17-ந்தேதி, 22-ந்தேதி, 26-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. 29-ந்தேதி கடைசிகட்ட தேர்தல் நடைபெறும். மேற்கு வங்காளத்துக்கும் மற்ற மாநிலங்களோடு சேர்த்து மே மாதம் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×