search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

    பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
     
    கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உள்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று மாலை 7 மணியளவில் மாணவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன். தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம்.

    தேர்வை கண்டு பயம் வேண்டாம். மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள். முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்கும் கவனம் செலுத்துங்கள்.

    மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை.

    மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், தேர்வுக்கு தயாராகும் போது ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என மாணவர்கள் கேள்வி கேட்டதற்கு, தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது என பதிலளித்தார்.
    Next Story
    ×