என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  கொரோனா அதிகரிப்பு: பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
  இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

  இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி இரண்டு நாள் கழித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும்’’ என்றார்.

  ஹர்ஷ் வர்தன்

  மேலும், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜரா் மாநிலங்களில் 80 சதவீத பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடைபிடித்த யுக்தியை தற்போதும் கடைபிடிப்பது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் விவாதித்தோம் என்றார்.
  Next Story
  ×