search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் இதுவரை 7.90 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 7,91,05,163 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ‘‘7.9 கோடியில் 90,09,353 சுகாதார ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டுள்ளனர். 53,43,493 சுகாதார ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ளனர். அதேபோல் 97,48,871 முன் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசையும் 41,33,961 முன்கள பணியாளர்கள் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். இதுதவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4,99,31,635 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோசும் 9,48,871 பேருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×