search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு சேகரிக்கும் பினராயி விஜயன்
    X
    வாக்கு சேகரிக்கும் பினராயி விஜயன்

    கேரளா சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் பிரசாரம்

    கேரளா மாநிலத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 14 மாவட்டங்களைக் கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.

    இந்த தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.  இதனை முன்னிட்டு ஆளும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் மக்களை சந்தித்து, பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வரவேற்றனர். சிறுவர்கள் பூங்கொத்துகளை காண்பித்தும், பலூன்களை ஏந்தியபடியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    Next Story
    ×