search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு
    X
    கோவிஷீல்டு

    கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

    கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாக மத்திய அரசு கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. 

    அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. அதேசமயம் 8 வாரங்களை தாண்டக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×