search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    2-வது முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழப்பு

    கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    முதலில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அதன்பின் முன்கள பணியாளர்கள் என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் செலுத்திய பின், சுமார் 24 நாட்களுக்குப்பின் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும். தற்போது 2-வது டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

    மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்தவர் ரஜ்னி சென். 60 வயதான இவர் ஏற்கனவே முதல் தடுப்பூசி போட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 2-வது தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பர்வானி மாவட்ட கலெக்டர், அந்த பெண்மணியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் அந்த பெண்ணின் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும்.
    Next Story
    ×