search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.177 கோடி ரேசன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

    ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரூ.177 கோடி மதிப்பிலான பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற கும்பலை போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர். மேலும் அவா்கள் மீது மராட்டிய திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு ரேசன் பொருட்கள் கடத்தலில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த கும்பல் பொது வினியோக திட்டம், அங்கன்வாடி போன்ற திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.177 கோடி மதிப்பிலான ரேசன் பொருட்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் ரேசன் பொருள் விற்பனை மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சம்பத் நாம்தேவ், அருண் நாம்தேவ், விஷ்வாஸ் நாம்தேவ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    சிறப்பு கோர்ட்டு 3 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.
    Next Story
    ×