search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் பொருட்கள் கடத்தல்"

    • பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.
    • தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறைக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து டி. ஜி. பி வன்னிய பெருமாள் உத்தரவின் படி, மதுரை மண்டல எஸ்.பி விஜய கார்த்திக் ராஜ் மேற்பார்வையில், டி. எஸ். பி ஜெகதீசன் தலைமையில், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் போஸ்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திண்டுக்கல், வடமதுரை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பொது விநியோக திட்ட பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்.

    இதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த கட்டணமில்லா எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    ×