search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூக்குத்தண்டனை கைதி ஷப்னம்
    X
    தூக்குத்தண்டனை கைதி ஷப்னம்

    அம்ரோகா கொலை வழக்கு... உ.பி. ஆளுநருக்கு புதிய கருணை மனு அனுப்பிய ஷப்னம்

    உத்தர பிரதேசத்தில் குடும்பத்தினரை தீர்த்துக்கட்டிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷப்னம், ஆளுநருக்கு புதிய கருணை மனு அனுப்பி உள்ளார்.
    லக்னோ

    உத்தரபிரதேசத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஷப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 

    இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டும் உறுதி செய்தன. மேலும் ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தனி அறை உள்ளது. அங்கு ஷப்னமை தூக்கில் போடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு ஷப்னம் புதிய கருணை மனுவை அனுப்பி உள்ளார். ஆளுநர் பெண் என்பதால் ஷப்னம் மீது கருணை காட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவரது வழக்கறிஞர்கள் யோசனை கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் கருணை மனுவில் ஷப்னம் கையெழுத்திட்டிருக்கிறார். கருணை மனுமீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதுவரை ஷப்னம் தூக்கிலிடப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. 
    Next Story
    ×