search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கர்நாடகத்தில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

    கர்நாடகத்தில் ஒரு சில காரணங்களால் கடந்த 13-ந் தேதி 2-வது கட்ட தடுப்பூசி பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.
    பெங்களூரு :

    நாடு முழுவதும் கடந்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் கர்நாடகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது. முதற்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது. முதலில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், 28 நாட்கள் கழித்து 2-வது முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    அதன்படி, கடந்த 13-ந் தேதி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கர்நாடகத்தில் ஒரு சில காரணங்களால் கடந்த 13-ந் தேதி 2-வது கட்ட தடுப்பூசி பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் 16-ந் தேதி 13 ஆயிரத்து 408 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. 2-வது கட்டமாக அவர்கள் கடந்த 14-ந் தேதியே தடுப்பூசி போட்டு கொண்டு இருக்க வேண்டும். ஓரிரு நாட்கள் தாமதமானாலும், முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கண்டிப்பாக 2-வது முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், அப்போது தான் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகத்திற்கு கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 15 லட்சத்து 52 ஆயிரம் டோஸ் வந்திருந்தது. அவற்றில் முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 185 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதன்மூலம் இன்னும் 10 லட்சம் வரையிலான டோஸ் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×