search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைசர் தடுப்பூசி மருந்து
    X
    பைசர் தடுப்பூசி மருந்து

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்த பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்னணி நிறுவனங்களின் தடுப்பூசிகள் சந்தைக்கு வரத் தொடங்கி உள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்தபிறகே தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதேபோல், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், இந்தியாவில் தனது கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. தற்போது அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது. 

    மருந்தின் செயல்திறன் தொடர்பாக சில கூடுதல் தகவல்களை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுள்ளதால், அந்த தகவல்களை இணைத்து மீண்டும் விண்ணப்பிக்கப்படும் என பைசர் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
    Next Story
    ×