search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயாராக உள்ளது- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேச்சு

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேசினர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது.

    மேலும், இந்த கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சியினர் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாய், சிவ சேனா எம்பி விநாயக் ராவத், சிரோமணி அகாலி தளம் கட்சியின் பல்விந்தர் சிங் பந்தர் ஆகியோர் விவசாயிகளின் போராட்டம் குறித்து நீண்டநேரம் பேசினர். ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஆர்சிபி சிங் வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசினார்.

    பின்னர் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயாராக உள்ளது என்றார். பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும், நாம் அனைவரும் தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும் மோடி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×