என் மலர்

  செய்திகள்

  விழாவில் பேசிய அமித் ஷா
  X
  விழாவில் பேசிய அமித் ஷா

  போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டம்... உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநிலத்தில் இன்று நடந்த போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
  கோக்ராஜர்:

  அசாம் மாநிலத்தில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த போடோலாந்து போராட்ட அமைப்புகள், மத்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆயுதம் ஏந்திய போடோ பழங்குடி மக்கள், இந்த ஒப்பந்தத்தை அடுத்து தனி போடோலாந்து மாநிலக் கொள்கையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்துடன் இணைந்தனர். இந்த ஒப்பந்தமானது, போடோலாந்து பிராந்திய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

  இந்த சிறப்பு மிக்க போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டு நிறைவடைய உள்ள உள்ள நிலையில், முதலாவது ஒப்பந்த நாள் கொண்டாட்டம் இன்று அசாமின் கோக்ராஜரில் தொடங்கியது. துவக்க விழாவில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

  போடோ மற்றும் போடோ அல்லாதவர்கள் என்ற பெயரில் விஷத்தை பரப்பி அசாமில் அமைதியைக் குலைத்தவர்களுக்கு இந்த பொதுக்கூட்டம் ஒரு பதில். இன்று போடோ மற்றும் போடோ அல்லாத பகுதி மக்கள் இங்கு வந்துள்ளனர். 

  போடோ அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். புரு-ரீங் பிரச்சினைக்கும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 8 ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் ஆயுதங்களை கைவிட்டனர். 

  போடோ சமாதான ஒப்பந்தத்துடன், வடகிழக்கில் அமைதியின்மை எங்கிருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தி அமைதிக்கு வழி வகுக்கப்படும் என்ற செய்தியை பிரதமர் கொடுத்தார்.

  இவ்வாறு அமித் ஷா பேசினார்.
  Next Story
  ×