என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழைப்பிதழ் இருந்தால்தான் அனுமதி : டெல்லி குடியரசு தின விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
Byமாலை மலர்23 Jan 2021 8:46 PM GMT (Updated: 23 Jan 2021 8:46 PM GMT)
டெல்லி குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை டெல்லி போலீசாா் விதித்துள்ளனர். தண்ணீர் பாட்டில், குடை கொண்டுவர தடை விதித்துள்ளனர்.
புதுடெல்லி:
நாட்டின் குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் ஜனவரி 26-ந் தேதி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆனால், கொரோனா காலம் என்பதாலும், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாலும் இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அமல்படுத்தப்பட உள்ளன.
ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரோந்து பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் காரணமாக, டெல்லி எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சுதந்திர தினத்தை போலவே, சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் போடப்படுகின்றன. பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து டெல்லி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட எல்லோரையும் அனுமதி்க்கும் வழக்கம் இந்த ஆண்டு கிடையாது. உரிய அழைப்பிதழ் அல்லது அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
பார்வையாளர்கள், பை, சிறிய பெட்டி, பின், உணவு பொருட்கள், கேமரா, பைனாகுலர், கையடக்க கேமரா, ஐபாட், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், பவர்பேங்க், டிஜிட்டல் டைரி, ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது.
தண்ணீர் பாட்டில், குடை, கத்தி, வாள், ஸ்க்ரூ டிரைவர், கத்தரிக்கோல், ரேசர், பிளேடு, பொம்மை துப்பாக்கி, சிகரெட், பீடி, ஆல்கஹால், தீப்பெட்டி, சிகரெட் லைட்டர், தெர்மோ பிளாஸ்க், வெடிபொருட்கள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், நறுமண தெளிப்பான்கள் ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது.
இவ்வாறு டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

Next Story
×