என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அதிரடி கமாண்டோ படை பிரிவில் பெண்களை சேர்க்க சி.ஆர்.பி.எப். பரிசீலனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிரடி கமாண்டோ படை பிரிவில் பெண்களை சேர்ப்பது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை பரிசீலித்து வருவதாக ஏ.பி.மகேஸ்வரி கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) அதிரடி கமாண்டோ பிரிவான கோப்ரா படைப்பிரிவு, நக்சல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 10 பட்டாலியன் கோப்ரா படையினர் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

  மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 6 பெண்கள் பட்டாலியன் படை உள்ளது. இந்த நிலையில், கோப்ரா படைப்பிரிவிலும் பெண்களை சேர்ப்பது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் ஏ.பி.மகேஸ்வரி நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

  கோப்ரா பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டிய சிப்பாய்கள் மன மற்றும் உடல் மட்டத்தில் கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×