search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்த படம் (கோப்புப்படம்)
    X
    தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்த படம் (கோப்புப்படம்)

    நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

    நேற்றும் இன்றும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்றில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிக அளவில் செலுத்தப்பட்டது.

    நேற்றைய முதல் நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான மையங்களில் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 553 மையங்களில் 17072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒட்டுமொத்தமாக 2,24,301 பேருக்கு இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×