search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டர் மாணவி
    X
    தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டர் மாணவி

    நாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

    நாடு முழுவதும் இன்று 3,351 மையங்களில் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று நாடு முழுவதும் தொடங்கின. அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது.

    நாடு முழுவதும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாலை ஐந்து மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முதல் நாளில் 3,351 மையங்களில் 16,755 தடுப்பூசி போடும் பணியாளர்களை கொண்டு 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

    சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,351 மைங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

    பஞ்சாப் சுகாதார பணியாளர்

    சில இடங்களில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரங்களை அனுப்புவதில் காலதாமதம், இன்றைய பட்டியலில் இல்லாத சில சுகாதார தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது போன்ற சில சிக்கல்கள் இருந்தன. பின்னர் அவைகள் சரிசெய்து கொள்ளப்பட்டன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×