search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேஷ் பூஷண்
    X
    ராஜேஷ் பூஷண்

    கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் விலை என்ன?: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு

    சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இருந்து ஒரு டோஸ் ரூ. 200 என்ற அடிப்படையில் 1.10 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் வாங்க இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தையும், பாரத் பயோடெக் (BBIL) தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தையும் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    16-ந்தேதி நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தில் இருந்து இன்று பாதுகாப்பாக கொரோனா தடுப்பூசி மருந்து நாடு முழுவரும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழகத்திற்கு 5.56 லட்சம் டோஸ்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு டோஸின் விலை 200 ரூபாயாகும்.

    பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் டோஸ்கள் வாங்கப்பட இருக்கிறது. இதில் ஒரு டோஸ் 295 ரூபாய் விதம் 38.5 லட்சம் டோஸ்கள் வாங்கப்பட இருக்கிறது. 16.50 டோஸ்கள் இலவசமாக அந்நிறுவனம் அளிக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×