search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும்

    நடப்பு நிதி ஆண்டு முழுவதும் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா தாக்கம் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9 சதவீதமும், 2-வது காலாண்டில் 7.5 சதவீதமும் சரிவடைந்தது.

    இந்தநிலையில், மொத்தத்தில் நடப்பு நிதி ஆண்டு முழுவதும் பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மொத்த உள்நாட்டு உற்பத்தி, ரூ.134 லட்சத்து 40 ஆயிரம் கோடியை எட்டும். நடப்பு நிதி ஆண்டில், உற்பத்தி துறை 9.4 சதவீதம் சரிவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை மட்டும் 3.4 சதவீதம் வளர்ச்சி அடையும். மற்ற அனைத்து துறைகளிலும் சரிவு காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×