search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி
    X
    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

    அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள், சிலைகள் தாக்கப்படுகின்றன - ஜெகன்மோகன் ரெட்டி

    அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள் மற்றும் சிலைகள் தாக்கப்படுகின்றன என ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    அமராவதி:

    ஆந்திர பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடவுள் ராமர் சிலையை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி இருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு இந்து சிலையை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

    ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமகேந்திரவரம் நகரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.  அதில், சுப்ரமண்யேஸ்வர கடவுளின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் சிலர் கடந்த 1-ம் தேதி அதிகாலையில் அதனை தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர்.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் துர்க பிரசாத் கூறுகையில், அதிகாலை 3 மணிவரை நாங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டோம். அதுவரை எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எனினும், காலை 5 மணியளவில் வந்த கோவில் பூசாரி, சிலை உடைந்து இருப்பது பற்றி கண்டறிந்துள்ளார்.

    அதனால் இந்த சம்பவம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணிக்குள் நடந்திருக்க கூடும். சி.சி.டி.வி. கேமிராக்கள் இருந்தபோதிலும், அவை இந்த சிலையை நோக்கி வைக்கப்படவில்லை. நாங்கள் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் அதில் பயன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதேபோல், சீதா தேவி சிலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

    ஆந்திராவில் கோவில் சிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள் மற்றும் சிலைகள் தாக்கப்படுகின்றன என ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், ஆந்திர பிரதேசத்தில் ஒரு புதிய வகையான அரசியல் கொரில்லா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கங்களுடன் நள்ளிரவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் கோவில்களும், சிலைகளும் தாக்கப்படுகின்றன. சிலைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×