search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ராணுவ குடியிருப்பு சுவர் இடிந்து விழுந்தது- 2 வீரர்கள் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
    கதுவா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் மச்சேதி பகுதியில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு சுவர் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். மற்ற வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
    Next Story
    ×