search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    பாரத் பந்த் துவங்கும் முன் பஞ்சாப் முதல்வர் அம்பானியை சந்தித்ததாக வைரலாகும் தகவல்

    விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான பாரத் பந்த் துவங்கும் முன் பஞ்சாப் முதல்வர் அம்பானியை சந்தித்ததாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் சமீபத்தில் இயற்றப்பட்ட விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 8 ஆம் தேதி பாரத் பந்த் நடைபெற்றது. நாடுதழுவிய பந்த்திற்கு எதிர்கட்சிகள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    பஞ்சாப் மாநிலத்தின் விவசாய சங்கங்கங்கள் சார்பில் புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் முகேஷ் அம்பானி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படம் பாரத் பந்த் துவங்க ஒரு நாள் முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் பஞ்சாபில் பல்வேறு முதலீடு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. `ஒரு பக்கம் போராட்டத்திற்கு ஆதரவு, மறுபக்கம் அம்பானியுடன் சந்திப்பு.' இது எந்த வகை அரசியல் எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்த போது, அது 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. மேலும் பஞ்சாப் முதல்வர் மற்றும் முகேஷ் அம்பானி சந்திப்பு பற்றி செய்தி எதுவும் வெளியாகவில்லை. அந்த வகையில் இருவரின் சந்திப்பு சமீபத்தில் நடைபெறவில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×