search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு
    X
    வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு

    ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்? -பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

    ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவதில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. எனினும், ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
     
    இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எல்பி ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி 100க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றும் என எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.கவிதா தெரிவித்தார். 

    பாஜகவைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்து, பல தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், ஐதராபாத் மக்கள் அவர்களை நம்பவில்லை. அத்துடன் கே.சி.ஆரின் (முதல்வர் சந்திரசேகர ராவ்) தலைமை மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கவிதா கூறினார்.
    Next Story
    ×