
சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசு சார்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதனை தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு கூறியிருந்தார்.
இந்த நிலையில், சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சபரிமலையில் தினமும் 2,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 4,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு முன்பு தினமும் 1,000 பக்தர்கள், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
நாளை முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.