என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்ட்டூன் சர்ச்சை - மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள்
Byமாலை மலர்30 Oct 2020 9:00 PM GMT (Updated: 30 Oct 2020 9:00 PM GMT)
மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்களை போலீசார் அகற்றினர்.
மும்பை:
முகம்மது நபிகள் குறித்த கார்ட்டூன் விவகாரத்தால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள் இமானுவேல் மேக்ரானை கடுமையாக சாடின. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் இமானுவேல் மேக்ரான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
இந்நிலையில், மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன.
சாலையில் ஒட்டப்பட்டிருந்த இமானுவேல் மேக்ரான் படங்கள் மீது வாகனங்கள் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. அதேபோல், இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்கள் பேரணி சென்ற காட்சிகளும் பரவி வருகின்றன.
பெண்டி பசாரில் உள்ள மொகமது அலி சாலையில் ஒட்டப்பட்டுள்ள இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
Next Story
×