search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்நாத்
    X
    கமல்நாத்

    நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் இருந்து கமல் நாத் பெயரை நீக்கியது தேர்தல் ஆணையம்

    மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் இடைதேர்தலுக்கான நட்சத்திர பிரசார பட்டியலில் இருந்து கமல் நாத் பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் கமல் நாத் முதலமைச்சராக இருந்தார். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகினார். தனது ஆதரவு எம்எல்ஏ-க்களையும் இழுத்துச் சென்றார். இதனால் கமல்நாத் ஆட்சியை இழந்தார்.

    அனைவரும் ராஜினாமா செய்ததால் சுமார் 23-க்கும் மேற்பட்ட சட்டசபை இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். பிரசாரத்தின்போது கமல்நாத் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. மேலும், தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கமல் நாத் நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவர் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டால் அந்த கூட்டத்திற்கான செலவு அப்பகுதி எம்எல்ஏ கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×