search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைலாஷ் சந்திர திரிவேதி
    X
    கைலாஷ் சந்திர திரிவேதி

    கொரோனாவில் இருந்து மீண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் சந்திர திரிவேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சகாரா (பில்வாரா) தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கைலாஷ் சந்திர திரிவேதி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்டார். இதற்கிடையே அவருக்கு திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. உடனே அவரை கடந்த 2-ந் தேதி ஜெய்ப்பூரில் இருந்து குர்கானில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரிக்கு விமானம் மூலம் கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கைலாஷ் சந்திர திரிவேதி எம்.எல்.ஏ. உயிரிழந்தார். அவருக்கு வயது 65. 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

    எம்.எல்.ஏ. மறைவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×