search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

    ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    புதுடெல்லி: 

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோந்த 19 வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்தர பிரதேச போலீசார் கையாண்ட விதமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்களின் நலன் கருதி உத்தர பிரதேசத்தில்  ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சி.எல். ஜெயசுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். 
    Next Story
    ×